இட ஒதுக்கீடு - ஒரு பார்வை
அத் 1 சுலோ31:-பிரம்மா,உலக வளர்ச்சியின் பொருட்டுத் தன்னுடைய முகம்,தோள்,தொடை,கால் ஆகியவ்ற்றினின்றும் பிராம்மணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன் ஆகியவர்களை முறையே உண்டு பண்ணினார்.
அத்1சுலொ100:- பிராமணன் முதற் பிறவி.அத்தகதியினால் பிராம்மணன் பிரம்மாவின் படைப்புலகில் காணப்படும் அனைத்துச் செல்வங்களையும் தனதாக்கிக் கொள்ளத் தக்க உரிமை படைத்தவனாகிறான்.
அட்1சுலொ101:-பிராம்மணன் மற்ற மூவரிடமிருந்தும் பெறுகிற உணவு,உடை பொருள் மற்றெதுவானாலும்,அவன் தன்னுடையதைத்தான் அவர்களிடமிருந்து பெறுகிறான்.ஏனெனில் அம்மூவரும் பிராம்மணனின் உடைமையை வைத்துத்தான் வாழ்ந்து வருபவர்களாவார்கள்.
அத்2சுலோ31:-பிராம்மணனுக்கு மங்களம்,சத்ரியனுக்கு பலம்,வைசியனுக்கு செல்வம்,சூத்திரனுக்கு அவன் அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களையே சூட்ட வேண்டும்.(அதனால்தான் சர்மன்,வர்மன்,பூபதி என்றும் தாசன்,கேசவன்,அமாவாசை பெயர்களும்).
அத்2சுலோ91:-மற்றவர்கட்கு உழைப்பதற்கென்றே சூத்திரன் படைக்கப்பட்டுள்ளான். மற்ற மூன்று வருணத்தார்க்கும் பொறாமையின்றிப் பணிவிடை செய்வதைச் சூத்திரனுக்கு முக்கிய அறமாகப் பிரம்மா ஏற்படுத்தியுள்ளார்.
அத்1சுலொ99:-பிராம்மணன் சாத்திர நூலைப் படிக்கலாம்; அவன் மற்ற வருணத்தார்க்குச் சொல்லித் தரக்கூடாது.
அத்8சுலோ270:-பிராம்மணர்களின் பெயர் கூறி இகழ்ச்சியாய்த் திட்டுகிற சூத்திரன் வாயில் பத்தங்குல நீலமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க.
அத்8சுலோ279:-பிராம்மணனைச் சூத்திரன் கையாலேனும் கருவியாலேனும் தாக்கினால் எந்தெந்த இடத்தில் அடித்தானோ அடித்தவனின் அந்தந்த உறுப்பை அறுத்திடுக.
அத்9சுலோ265:-பிராம்மணன் மீது காறியுமிழ்பவனின் உதடுகளை அறுத்திடுக; மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு; மலத்தை வீசினால் ஆசனப் பகுதியை அறுத்துவிடு.
அத்8சுலோ380:-பிராம்மணன் எப்பாவம் செய்தாலும் அவனைக் கொல்லாமல்,காயமின்றி,அவன் பொறுளுடன் ஊரைவிட்டுத் துரத்த வேண்டியது.
அத்8சுலோ381:-பிரம்மஹத்தியை விட(பார்ப்பானைக் கொல்வது)அதிகமான பாவம் உலகத்திற் கிடையாது.ஆதலால் பிராமம்மணனைக் கொல்ல வேண்டும் என்று அரசன் மனத்தினாலும் நினைக்கக் கூடாது.ஆனால் சூத்திரன் நிலை என்ன?
அத்9 சுலோ248:-பிராம்மணனுடைய பொருளைப் பிடுங்கிக் கொண்டு அவனை அடித்துத் துன்புறுத்துகின்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லுக.
இதெல்லாம் கதைகள் என்று பல மன்னர்களும் மடையர்களும் சொல்வார்கள். அதனால் தான் சோழ மன்னர்கள் பல மங்கலங்கள்(நல்ல நஞ்சை நில கிராமங்கள்). சதுர்வேதி மங்கலங்கள்,பார்ப்பனர்களுக்காகவே கல்வி மானியங்கள் நன்கொடை செய்தனர்.
இதெல்லாம் வெறும் பேச்சு என்று சொல்லும் வீணர்களுக்காகத்தான் வடமொழி அறிந்த சுந்தரனார் சொன்னார்"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவர நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொரு நீதி".
பாரதியார் சொல்கிறார்,"சூத்திரனுக்கொரு நீதி தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,சாத்திரம் சொல்லிடு மாயின்அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்".
இது இன்று இல்லை என்று சொல்லும் அறிவுக் கொளுந்துகளே, உங்களுக்காகவேத்தான் உச்ச நீதி மன்றம் காஞ்சி சுப்பிரமணிக்குத் தனிநீதித் தர அனைத்து விதத்திலும் கடுமையாக உழைக்கிறது.
பெண்ணடிமை பற்றி நீங்களே படியுங்கள். பார்ப்பனர்களின் ஏமாற்றிற்கும் சில தமிழர்கள் என்ற படித்தாகச் சொல்லிக் கொள்ளும் அறிவில்லா ஜீவிகளுக்கும் சேர்ந்துதான் மனுநீதியை பாபா சாகேப் அம்பேத்கர் கொளுத்தினார். திருவள்ளுவர் முதல் பெரியார் வரை திட்டித் தீர்த்தார்கள். ஆம் இன்று நீங்கள் பொட்டுக் கட்டி வாழ நினைத்தாலும் உங்களுக்கும், உங்கள் பெண்களுக்கும் சேர்த்துத்தான் பெண்ணுரிமைக்காகப் போராடிப் "பெரியாரா"க்கப் பட்டார். மூடி மறைக்காதீர்கள். உடைகளை மாற்றியதைப் போல் உள்ளங்களை மாற்றிக் கொண்டு மனிதர்களாகுங்கள். உங்களை வரவேற்போம்,மனிதர்களாக.
வேதா விற்பன்னர்கள் நிறைய பேசுகிறார்களே, இந்த சுலோகம் பற்றிச் சொல்வார்களா?
ரிக்வேதம் பிரிவு62 சுலோகம்10:-
தேவாதீனம் ஜகத்சர்வம்
மந்த்ராதீனம் துதேவதா
தன்மந்தரம் பிராமணாதீனம்
பிராமணா மம் தேவதா.
இதன் பொருள்:-
உலகம் கடவுளுக்குக் கட்டுப் பட்டது
கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்
மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை
எனவே பிராமணர்களே நமது கடவுள்!
மனித உரிமை ஆர்வலரும், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளருமான புதுச்சேரி சுகுமாரனின் இடஒதுக்கீடு தொடர்பான முந்தைய கட்டுரை
உலகநாடுகளில் இட ஒதுக்கீடு (விக்கிப்பீடியாவிலிருந்து...)அமெரிக்க ஐக்கிய நாடுகளில் : இங்கு 30 வருடங்களாக இனம், இருப்பிடம், பால் போன்ற முறைகளில் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ஆனால் அது அரசாங்க கொள்கை அல்ல, அரசியல் கட்சிகளின் கொள்கை அல்ல, அது தனிப் பல்கலைக்கழகங்களின் செயல் முறையாகும்; அதனால் வருடாவருடம் யாருக்கு, எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என்பது மாறலாம்.
தென்னாப்பிரிக்க குடியரசில் 15 வருடங்களுக்கு முன் தான் அபார்தைட் என்ற இனப் பாகுபாடு முறை கைவிடப்பட்டு, சிறுபான்மை ஆப்பிரிக்கானர் இனத்தின் பேராதிக்கம் ஒழிக்கப் பட்டு, மக்களாட்சி வெற்றி கொண்டது. அதை அடுத்து 200 வருடங்களாக ஒடுக்கப் பட்ட கருப்பர்களுக்கு சாதகமாக ஒதுக்கி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
இந்தியா: இந்தியாவில் மரபினால் சமூக கொடுமைகளுட்பட்ட பல சாதியினருக்கு பரவலாக ஒதுக்கீடு உள்ளது.
மலேசியாவில் : இங்கே பெரும்பான்மையினரான மலாய இனத்தினர், தங்கள் ஆதிக்கத்தை நிலைநிருத்த கடந்த 50 ஆண்டுகளாக ' பூமிபுத்திரர்' கொள்கையின் படி தங்களுக்கு பரவலாக இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளனர்.
இலங்கை: மொழி, மாவட்ட, இன வாரியாக இட ஒதுக்கீடு உண்டு.
பாஸ்னியா: பெண்களுக்கு போலீஸ் இலகாவில் 29% ஒதுக்கீடு.
பிரேசில்: சில பல்கலைகழகங்களில் உடல் ஊனமுற்றவர்களுக்கும், பழங்குடிகளுக்கும்
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
முதல் பதிவு
Wednesday, 28 March 2007
தமிழர் திருநாள் வாழ்த்துக்களுடன்
மறுமலர்ச்சி இணைய இதழின்
முதல் பதிவு
முன்னுரை
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
முன்தோன்றிய மூத்தக் குடி
நம் தமிழ்க் குடி
இவை வெறும் வார்த்தைகளல்ல. நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற மொழியின் சிறப்பையும் இனத்தின் தொன்மையையும் உலகிற்கு எடுத்துக் கூறும் ஆதாரம்.
சேர, சோழ பாண்டிய மன்னர்களின் காலத்தில் உலகின் மாபெரும் வல்லரசாக இருந்தும்கூட யாரையுமே அடிமைப்படுத்தாமல் பிறரை வாழ வைத்து விளங்கிய தமிழ் இனம் இன்று தனது சொந்த மண்ணிலேயே வாழ்விழந்து போகச் செய்துவிட சதி நடக்கிறது. சாதியால், மதத்தால், அரசியலால் தன் பொலிவை இழந்து நிற்கிறது. தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களே அதற்கு துணை போவது வருந்தத்தக்கது. ஒரு மனிதனால் சாதியின்றி வாழ்ந்திட இயலும். மதம் இன்றி மகத்துவமாய் வாழ்ந்திட இயலும். ஆனால் மொழியின்றி எவரேனும் வாழ்ந்ததுண்டா ?
மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டுமே என அதனை அலட்சியப் படுத்த வேண்டாம். மிருகம் முதல் மனிதன் வரை மொழியின்றி வாழ்வது கடினம். மழலைக்கும் தாய்க்கும் உள்ள அன்பும் ஒரு மொழி தான் நண்பர்களே... பேச இயலாதவர்களும் அடுத்தவரை தொடர்பு கொள்ள ஒரு மௌன மொழியை நாடியாக வேண்டும். இந்த உலகில் வாழ்ந்து மடியும் வரை நமக்கும், மடிந்த பின்னர் நம் சங்கதியினருக்கும் தொடர்ந்து உதவிவரும் மொழிக்கு நாம் நன்றி செலுத்துவது நம் கடமையல்லவா ? அதுமட்டுமல்ல தோழர்களே ஒவ்வொரு தேசிய இனங்களின் அடையாளமும் வேரும் மொழியிலிருந்து தான் பிறக்கின்றன என்பது உலகறிந்த உண்மை.
ஒரு தேசிய இனம் என்பது தனக்கானதொரு மொழி, வரலாற்று தொன்மை மிக்க சிறப்பியல்புகள் கொண்ட பண்பாடு போன்றவற்றைக் கொண்டு தனித்து இயங்கும் வல்லமையும் பெற்ற இனமாகும். அப்படி பார்த்தால் தமிழர்கள், மலையாளிகள் மற்றும் இதே போன்ற இயல்புள்ள மற்ற இனங்களும் தேசிய இனங்களாகும்.
மனிதர்களை இனங்களாக பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று எண்ணுபவர்களுக்கு ஒர் அறிவிப்பு. நாம் இன்னும் இந்தியாவில் தான் இருக்கிறோம். நம் தமிழ் மண்ணைச் சுரண்டி நெய்வேலி நிலக்கரியிலிருந்து மத்திய அரசு அண்டை மாநிலங்களுக்கு மின்சாரத்தை வாரி வழங்கும் போது மட்டும் நாம் இந்தியர்களாக தெரிவோம். ஆனால் 'கொடு என்றாலும் கொடுக்க மாட்டேன்' என தண்ணீர் வழங்க மறுக்கும் போது மட்டும் நாமும் இந்தியர்கள் என அவர்களுக்கு மறந்து விடுகிறது. மறக்கப்படுகிறது. காரணம் அவர்கள் இனரீதியாக ஒற்றுமையாக
முடிவெடுக்கிறார்கள். ஆனால் நாம் தான் இன்னமும் 'நாம் இந்தியர்' என கூறிக் கொள்கிறோம்.
இந்திரா காந்தி அம்மையார் மறைந்ததை கேட்டு 17 தமிழர்கள் தற்கொலையுண்டனர். ஒருவர் மலேசியா நாட்டில் தற்கொலை செய்த கொண்டார். அவரும் தமிழரே. இன்னொருவர் ஒரிசா மாநிலத்தில் தற்கொலையுண்டார். விசாரித்து பார்த்ததில் அவரும் தமிழரே... இந்திரா காந்தி அவர்களின் பிறந்த மண்ணிலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியிலும் கூட இப்படி நடக்கவில்லை. தமிழர்கள் எந்த அளவிற்கு உணர்ச்சிகரமானவர்கள் என்பதற்க இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நமக்கு மட்டும் தான் இந்தியாவிலேயே இந்திய தேசிய பாசம். இனப்பிரிவினை வாதம் என்று பேசுபவர்கள் தயவு செய்த மற்ற மாநிலங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முயலவும்.
நாம் இந்தியர் தான்.. இந்தியாவில் வசிப்பதினால் மட்டுமே....
இது குறித்த பல சிந்தனைகளைக் கொண்ட 'தமிழ் தேசியம்' என்ற கட்டுரையை இந்த இணைய இதழின் முதல் வெளியீட்டில் வெளியிட்டு மகிழ்கிறோம். இக்கட்டுரையாளரும் தமிழ் தேசியத்திற்காக நீண்ட காலம் போராடி வருபவரும், தமிழர் கண்ணோட்டம் என்னும் தமிழ் தேசிய மாத இதழின் ஆசிரியருமான திரு.பெ.மணியரசன் அவர்கள் தக்க விளக்கங்களுடன் அதனை விளக்கியுள்ளார். அன்பர்கள் படித்து தெளிவு பெறவும். படித்த நண்பர்கள் பின்னூட்டங்கள் அளித்து விவாதங்கள் நடத்த முன்வர வேண்டும். இன்றைய தமிழ் சமுதாயத்தில் விவாதங்களுக்கு வர வேண்டிய பல விடயங்களில் இது மிக முதன்மையானது.
நம் தாய் மொழி இந்தியல்ல. தமிழ். நம் பண்பாடு வடவர் பண்பாடல்ல. தமிழ் பண்பாடு. ஆகையால் நாம் தமிழர் என்கிற உணர்வு மேலோங்க வேண்டும் என்று கூறி இந்த இதழின் முதல் பதிவை சமர்ப்பிக்கிறோம்....
அடுப்புத் தீயில் பொங்கல் பொங்கட்டும்
மனத்தீயில் தமிழ் தேசிய உணர்வு பொங்கட்டும்...
வாழ்க தமிழ் ! வெல்க தமிழ் தேசியம்!
தோழமையுடன்
க.அருணபாரதி
பொறுப்பாசிரியர்
Labels: ஆசிரியர் உரை